
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது, மக்களைக் காப்போம் தமிழகத்தை மீட்போம் 7, 8 ஆகிய 2 நாட்கள் கோவையில் நான்கு தொகுதிகளில் சுற்றுப்பயணம் செய்தேன். அப்போது மக்களின் அளவற்ற அன்பும், பேர் ஆதரவும் என்னை அவர்களின் ஒருவனாக நினைக்க செய்தது. ஆனால் மக்கள் என்னிடம் சொல்லிய விஷயங்கள் கவலைகள் வேதனைகள் சோகங்கள் சொல்லொண்ணாதவை.
ஸ்டாலின் மாடல் அரசின் அக்கிரமங்கள் மற்றும் அட்டூழியங்களால் நம் மக்கள் நினைத்ததை விட அதிகமாக பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். மு க ஸ்டாலின் அவர்களே உங்களின் காட்டாட்சியும் ,கொடுங்கோல் ஆட்சி பற்றியும் எனக்கு ஏற்கனவே தெரியும். நான் பலதரப்பட்ட மக்கள் பல வகையிலும் படும் கஷ்டங்களை நேரில் சந்தித்தபோது எனது நெஞ்சம் கலங்கியது, மனவேதனை அடைந்தேன். மின் கட்டண உயர்வால் பொதுமக்களும், தொழில் நிறுவனத்தினரும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.
வரி உயர்வால் விளைச்சலுக்கு சரியான விடை இல்லாமல் வரிசுமையாலும் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளன. இவையெல்லாம், இவற்றையெல்லாம் என்னிடம் சொல்லி இதற்கெல்லாம் முடிவாக அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஆட்சிதான் வரவேண்டும் என்று தனது கரங்களைப் பிடித்து கவலைகளை தெரிவித்தனர். தற்போது உள்ள இருண்ட காலத்தை மாற்றி இழந்த பொற்காலத்தை நான் மீட்டு தருவேன் என்று உறுதி அளித்துள்ளேன். திமுக ஆட்சியை வீட்டுக்கு அனுப்ப வேண்டும்.
தமிழ்நாட்டுக்கு விரைவில் விடிவுகாலம் வர வேண்டும் என்ற மக்களின் கூக்குரலை நான் அறிவேன். ஏன் இந்த நாடே அறியும் இந்த 50 மாதங்களில் தமிழ்நாட்டு மக்களுக்கு நீங்கள் கொடுத்த பரிசு என்னவென்றால் கிட்டத்தட்ட ரூ.4 லட்சம் கோடி கடனை அவர்கள் தலையில் சுமத்தியது தான் என்று அவர் தனது அறிக்கையில் கூறியுள்ளார். இந்தப் பயணத்தின் போது திரண்டு வந்த மக்களின் எழுச்சியும் அவர்கள் கொடுத்திட்ட பேர் ஆதரவுமே எனக்கு சாட்சி மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம் விடிய ஆட்சியை வீட்டுக்கு அனுப்பவும் என்று அவர் தெரிவித்துள்ளார்.