
இந்தியாவில் இந்தியன் பிரீமியர் லீக் போட்டிகள் நடைபெறுவது போன்று இலங்கையில் நடைபெறும் டி20 கிரிக்கெட் தொடர் இலங்கை பிரிமியர் லீக் என்று அழைக்கப்படுகிறது. இந்த எல்பிஎல் தொடருக்கான வீரர்கள் ஏலம் இன்று நடைபெற்ற நிலையில் அதிக தொகைக்கு ஏலம் போன வீரர் என்ற பெருமையை மதிஷா பத்திரனா பெற்றுள்ளார்.
இவர் சென்னை அணிக்காக ஐபிஎல் தொடரில் விளையாடுகிறார். இந்நிலையில் ஏலத்தில் ஒரு கட்டத்தில் பத்திரனா மீது போட்டி அதிகரித்த நிலையில் அவர் மீதான ஏலத்தொகை கிடுகிடுவென உயர்ந்தது. இவர் முதலில் 50,000 டாலர்கள் என்ற விலையில் ஏலம் விடப்பட்ட நிலையில் இறுதியில் கொலம்போ ஸ்டிரைக்கர்ஸ் அணி அவரை 1,20,000 டாலருக்கு வாங்கியது. இது இந்திய மதிப்பில் ரூ. 99 லட்சத்து 96 ஆயிரத்து 99 ரூபாயாகும். மேலும் இதன்மூலம் எல்பிஎல் வரலாற்றில் அதிக தொகைக்கு ஏலத்தில் எடுக்கப்பட்ட முதல்வீரர் என்ற சாதனையை பத்திரனா பெற்றுள்ளார்.