கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள நடுப்பாளையத்தில் செந்தில்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் பாலாஜியும்(23) பட்டணம் பகுதியில் வசிக்கும் யோகேஸ்வரி(22) என்ற பெண்ணும் கடந்த மூன்று ஆண்டுகளாக காதலித்து வந்தனர். இதனை அறிந்த யோகேஸ்வரியின் பெற்றோர் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் காதலர்கள் வீட்டை விட்டு வெளியேறி திருப்பூரில் இருக்கும் கோவிலில் திருமணம் செய்து கொண்டனர்.

இதனையடுத்து காதலர்கள் பாதுகாப்பு கேட்டு கோவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் தஞ்சம் அடைந்தனர். பின்னர் யோகேஸ்வரி அளித்த மனுவில் கூறியிருப்பதாவது, நாங்கள் இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டோம். இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர். தற்போது பெற்றோர் எங்களை மிரட்டுகின்றனர். மேலும் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதால் எங்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என கூறியுள்ளார்.