காதலர் தினம் நாளை (செவ்வாய்க்கிழமை) கொண்டாடப்பட இருக்கிறது. காதலர் தின வாரம் சென்ற 7ம் தேதி ரோஜா தினத்துடன் துவங்கியது. இதையடுத்து காதலுடன் தொடர்புடைய புரபோஸ் டே, சாக்லேட் டே போன்றவை கொண்டாடப்பட்டது. அதன்படி இன்று (பிப்.13) Kiss day கொண்டாடப்படுகிறது. தன் இணை மீது வைத்திருக்கும் அன்பின் உச்சபட்ச வெளிப்பாடாகவே முத்தம் பார்க்கப்படுகிறது

காதலர் தினத்தன்று ஒரு ஜோடி 58 மணி நேரம் முத்தம் கொடுத்து உலக சாதனை படைத்துள்ளது. தாய்லாந்தில் கடந்த 2013 ஆம் வருடம் காதலர் தினத்தை முன்னிட்டு நடைபெற்ற முத்த போட்டியில், திரணரத் மற்றும் அவரது மனைவி லக்சனா ஜோடி 58 மணி நேரம் 35 நிமிடம் 58 வினாடிகள் தொடர்ந்து முத்தம் கொடுத்து 9,000 டாலர் பரிசை வென்றுள்ளனர். நடப்பு ஆண்டு தாய்லாந்தில் இந்த சாதனையை முறியடிப்பார்களா? என்ற எதிர்பார்ப்பு தற்போது நிலவியுள்ளது.