
தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக இருப்பவர் மணிரத்தினம். இவர் நடிகர் கமல்ஹாசன் மற்றும் நடிகர் சிம்பு ஆகியோரை வைத்து இயக்கிய “தக் லைஃப்” திரைப்படம் வருகிற ஜூன் 5ம் தேதி வெளியாக இருக்கிறது. இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் இயக்குனர் மணிரத்தினத்தின் அடுத்த படம் குறித்த தகவல் தற்போது வெளியாகி உள்ளது. அவரின் அடுத்த திரைப்படத்தில் பிரபல தெலுங்கு நடிகர் நவீன் பொலிஷெட்டி ஹீரோவாக நடிக்க இருக்கிறார் என்று கூறப்படுகிறது . இது ஒரு ரொமான்டிக் திரைப்படமாக இருக்கும் நிலையில், தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளிலும் உருவாக இருக்கிறது என்றும் தகவல் வெளிவந்துள்ளது. மேலும் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று கூறப்படுகிறது.