திருச்சியில் இருந்து பயணிகளை ஏற்றிகொண்டு அரசு விரைவு குளிர்சாதன பேருந்து தேனி நோக்கி சென்று கொண்டிருந்தது. அந்த பேருந்தை செந்தில்குமார் என்பவர் ஓட்டி சென்றுள்ளார். கண்டக்டராக செல்வகுமார் என்பவர் பணியில் இருந்துள்ளார். இந்நிலையில் திருச்சி- திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் டி.என் பாறைப்பட்டி பிரிவு பகுதியில் பேருந்து சென்று கொண்டிருந்தது.

அதே சமயம் தவிடு மூட்டைகளை ஏற்றிக்கொண்டு மூணாண்டிபட்டியில் இருந்து வெங்கடேசன் என்பவர் லாரியை ஓட்டி சென்றார். திடீரென அந்த லாரி தேசிய நெடுஞ்சாலை குறுக்கே கடந்து சென்றதால் அரசு பேருந்து லாரியின் பின்புறம் பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் செந்தில்குமார், செல்வகுமார், பயணிகளான ஹமீது, அவரது மனைவி ஆயிஷா பேகம், மகன் அஜிஸ், ராஜா உள்ளிட்ட 17 பேர் படுகாயம் அடைந்தனர்.

இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று படுகாயம் அடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.