அரியலூரில் இருந்து டேங்கர் லாரி கேரளா நோக்கி சென்று கொண்டிருந்தது. அந்த லாரியை கோகுல் என்பவர் ஓட்டி சென்றுள்ளார். இந்நிலையில் கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள சூலூர் புதிய பேருந்து நிலையம் அருகே சென்ற போது நாமக்கல்லில் இருந்து சூலூர் நோக்கி சென்ற சரக்கு லாரி சாலையை கடக்க முயன்றது. அப்போது எதிர்பாராதவிதமாக டேங்கர் லாரியும், சரக்கு லாரியும் மோதிக்கொண்டது. இந்த விபத்தில் சரக்கு லாரியின் டீசல் டேங்க் உடைந்து டீசல் சாலையில் வழிந்து ஓடியது.

இதனை பார்த்ததும் டீசல் தீப்பிடித்து விடும் என்ற அச்சத்தில் பொதுமக்கள் அலறியடித்து கொண்டு ஓட்டம் பிடித்தனர். இதுபற்றி அறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு சென்று டீசல் மீது மணலை கொட்டி விபத்து ஏற்படாமல் தடுத்தனர். இதுபற்றி அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விபத்துக்குள்ளான லாரிகளை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சரி செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.