தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள பி.ஏ.ஒய் நகரில் லதா என்பவர் வசித்து வருகிறார். இவர் பெங்களூரில் இருக்கும் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் ஒண்டிப்புதூர் சேர்ந்த செல்வராணி என்பவருக்கும் லதாவுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. இந்நிலையில் செல்வராணி தான் பெரிய அளவில் வர்த்தகம் செய்து வருவதாகவும், ஏராளமான தொழிலதிபர்களின் பழக்கம் இருப்பதாகவும் தெரிவித்தார். மேலும் முதலீடு தொகைக்கு ஏற்ப இரட்டிப்பு லாபம் கிடைக்கும் என செல்வராணி லதாவிடம் கூறியுள்ளார்.

இதனை நம்பி லதா 65 லட்ச ரூபாய் கொடுத்தார். ஆனால் கூறியபடி லாப தொகையை தரவில்லை. இதனை தொடர்ந்து செல்வராணி 37 லட்ச ரூபாய் பணத்தை மட்டும் திரும்ப கொடுத்துள்ளார். மீதமுள்ள 28 லட்ச ரூபாய் பணத்தை கொடுக்கவில்லை. இதனால் தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த லதா காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஏற்கனவே செல்வராணி மீது மோசடி தொடர்பாக சில வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கதாகும்.