சமூக வலைதளங்களில் தற்போது பலவிதமான வீடியோக்கள் வைரலாகி வருகிறது. அந்த வகையில் தற்போது பாண்டாவுடன், பராமரிப்பாளர் ஒருவர் விளையாடும் வீடியோவும் வைரலாகி உள்ளது. அந்த வீடியோவில், பராமரிப்பாளரும், சில பாண்டா குட்டிகளும் நெருக்கமாக விளையாடிக் கொண்டு இருப்பது மக்களின் மனதை முழுமையாக கவர்ந்துள்ளது. “இந்த வேலையை எங்களுக்கு தாருங்கள், சம்பளம் வேண்டாம்” என நெட்டிசன்கள் கமெண்ட் செய்யும் நிலை உருவாகியுள்ளது.
who wants this job? 🐼 🥰 pic.twitter.com/3VfV9qLKne
— Nature & Animals🌴 (@naturelife_ok) September 14, 2025
வீடியோவில், பராமரிப்பாளர் ஒருவர் சிறிய பாத்திரத்தில் தண்ணீர் எடுத்துச் சென்று, அவர் அமர்ந்ததும் மூன்று அல்லது நான்கு பாண்டா குட்டிகள் ஓடி வந்து அவரை கட்டிக்கொள்கின்றன. பிறகு அவர் ஒவ்வொரு பாண்டாவையும் மெதுவாக துடைத்து, குளிப்பாட்டுகிறார்.
அந்தக் காட்சியில் பாண்டாக்கள் அவர்மீது ஏறி விளையாடுவதும், குழந்தைகள் போல அன்பு காட்டுவதும் அனைவரையும் இன்பத்தில் ஆழ்த்தியுள்ளது. குழந்தையைப் போல பாண்டாக்களை பராமரிக்கும் அந்த வீடியோ, பார்ப்பவர்களை சிந்திக்க வைத்திருக்கிறது.
இந்த 55 வினாடிகள் மட்டுமே கொண்ட வீடியோ, தற்போது 1 லட்சத்துக்கும் மேற்பட்ட பார்வைகளை பெற்றுள்ளது. 4,000-க்கும் மேற்பட்டோர் லைக் செய்து “இதுதான் உலகின் அழகான வேலை”, “இந்த வேலையை உடனே ரிசைன் பண்ண தயார்!” என்று கமெண்ட்கள் தந்துள்ளனர்.
ட்விட்டரில் @naturelife\_ok என்ற பக்கத்தில் பகிரப்பட்டுள்ள இந்த வீடியோக்கு “Who wants this job?” என்ற கேப்ஷன் கொடுக்கப்பட்டிருக்க, மக்கள் வரிசையாக ‘நான் தான்!’ என்று பதிலளிக்கின்றனர்.
