திமுக சார்பில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய அக்கட்சியின் அமைப்பு செயலாளர் ஆ.எஸ் பாரதி, ராமாயணத்தை எதிர்த்து,  ராமரை எதிர்த்து,  ஒரு போராட்டத்தை  நடத்திக் கொண்டிருந்தார். அந்தப் போராட்டத்தினுடைய ஊர்வலம் சேலத்தில் போய்க் கொண்டிருக்கிறது. பெரியார் ஊர்வலத்தில் போகிறார். பெரியார் மீது எவனோ ஒருவன் செருப்பை தூக்கி எறிகிறான். இங்கேதான் கவனிக்க வேண்டும். இப்பொழுது திரிச்சி  பேசுகிறார்கள். பெரியார் ராமரை செருப்பால் அடிக்கவில்லை. பெரியாரை தான் எவனோ ஒரு கயவன் செருப்பை தூக்கி அடித்தான்.

அந்த செருப்பு நல்ல செருப்பு. பெரியார் மீது படாமல் கீழே விழுந்தது. கீழே விழுந்த செருப்பை எடுத்து ஒருவன் திருப்பி அடிச்சான், அது போய்  ராமர் படத்தில் பட்டது.  அதுதான் ஒரு உண்மை. ஆனால் இதை வைத்து ஒரு மிகப்பெரிய பிரச்சாரத்தை செய்தார்கள். சென்னை கடற்கரையில் ஒரு பெரிய கூட்டத்தையே போட்டார்கள். அப்போது தான் அரசியலுக்கே வந்தார் ”சோ”.

துக்ளக் என ஒரு பத்திரிக்கையை ஆரம்பித்து,  கடற்கரையில் கூட்டம் கூட்டினார்கள். அப்போது எம்ஜிஆர் நமது சட்டமன்ற வேட்பாளராக  போட்டியிடுகிறார். நாங்கள் எல்லாம் ஊதிய சூரியன் சின்னத்திலே  அவருக்கு ஓட்டு கேட்கிறோம். கடற்கரையில் ”சே”வுக்கு கூடிய கூட்டத்தை பார்த்து எல்லோரும் பயந்து போனோம்.

காரணம் என்னவென்று கேட்டால் ? அவ்வளவு பெரிய கூட்டம். அந்த ”சோ”வுக்கு கூடிய கூட்டத்தை பார்த்துவிட்டு,  டெல்லியில் இருக்கிற ராம்லிலா மைதானத்திற்கு ”சோ”வை பேசுவதற்கு அழைத்துக்   கொண்டு போனார்கள். தேர்தல் நடந்தது. தேர்தல் முடிவு என்ன தெரியுமா ? திராவிட முன்னேற்ற கழகம் 184 இடங்களிலே வெற்றி பெற்று, இதுவரையில் அந்த ரெக்கார்டை யாரும் உடைக்கவில்லை என தெரிவித்தார்.