மக்களவைத் தேர்தல் தொடர்பாக தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார், புதிதாக நியமிக்கப்பட்ட தேர்தல் ஆணையர் இன்று காலை ஆலோசனை நடத்தினர். புதிய தேர்தல் ஆணையர்கள் ஞானேஷ்குமார், எஸ்.எஸ் சாந்து ஆகியோருடன் தலைமை தேர்தல் ஆணைய ராஜூகுமார் ஆலோசனை நடத்தினார். காலையில் 45 நிமிடம் நடந்த கூட்டத்தில் எத்தனை கட்டங்களாக, எந்தெந்த தேதிகளில் தேர்தல் நடத்துவது என முடிவுசெய்யப்பட்டது.

இந்நிலையில் மக்களவைத் தேர்தல் தேதியை நாளை பிற்பகல் 3 மணிக்கு அறிவிக்கிறது இந்திய தேர்தல் ஆணையம். மக்களவைத் தேர்தல் தேதி மற்றும் சில மாநிலங்களில் நடைபெறும் சட்டமன்ற தேர்தல் தேதியும் நாளை அறிவிக்கப்பட உள்ளது.

பொதுத் தேர்தல் 2024 மற்றும் சில மாநில சட்டசபைகளுக்கான அட்டவணையை அறிவிக்க தேர்தல் ஆணையத்தின் செய்தியாளர் சந்திப்பு நாளை மார்ச் 16ஆம் தேதி மாலை 3 மணிக்கு நடைபெறும். இது  ECI இன் சமூக ஊடக தளங்களில் நேரடியாக ஒளிபரப்பப்படும்.