சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட கோவில் காவலாளியான அஜித் என்பவர் காவல்துறையினரால் அடித்துக் கொல்லப்பட்டதாக புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து 6 காவலர்களை மாவட்ட எஸ்.பி பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார். இதற்கிடையில் உயிரிழந்தவரின் உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது.

இந்நிலையில் அவரது உடலில் 18 காயங்கள் கண்டறியப்பட்டதாக பிரேத பரிசோதனை அறிக்கையில் வெளியாகி உள்ளது. அதாவது தவறி விழுந்த போது வலிப்பு ஏற்பட்டு உயிரிழந்ததாக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது. வலது கை மூட்டுக்கு மேலேயும் வலது கை மணிக்கட்டுக்கு கீழேயும் சிராய்ப்பு காயங்கள் இருந்தன.

இடது பக்க காதில் ரத்தம் வடிந்த நிலையிலும், வலது பக்க காதில் உள்பக்கம் ரத்தம் உறைந்த நிலையில் இருந்தது. இடது பக்க தோள்பட்டை முதல் முழுமை மூட்டு வரை கன்றிய காயங்கள் இருந்தன. இடது பக்க இடுப்பு வலது பக்கப்பின் முதுகில் சிராய்ப்புகள் இருந்ததாகவும் பிரேத பரிசோதனை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.