லவ் இன்சூரன்ஸ் கார்பரேஷன்’ படத்திற்கு LIC என்ற தலைப்பை பயன்படுத்துவதை நிறுத்தக் கோரி 7 ஸ்க்ரீன் ஸ்டுடியோ தயாரிப்பு நிறுவனம் மற்றும் இயக்குநர் விக்னேஷ் சிவனுக்கு பொதுத்துறை காப்பீட்டு நிறுவனமான எல்.ஐ.சி. சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. ஏழு நாட்களுக்குள் படத்தின் பெயரை மாற்றாவிட்டால் உரிமையியல் மற்றும் குற்றவியல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என நோட்டீசில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ‘லவ்டுடே’ பிரதீப் ரங்கநாதன் நடிக்கும் இப்படத்தை விக்னேஷ் சிவன் இயக்குகிறார்.