சென்னை, கிண்டியில் திரைத்துறையினர் சார்பில் ‘கலைஞர் 100’ விழா நடைபெற்றது. திரைத்துறையை சார்ந்த் முன்னணி நடிகர்கள், இயக்குனர்கள் உள்ளிட்டோர் இதில் பங்கேற்றனர். நடிகர்கள் ரஜினி, சிவக்குமார், சூர்யா, தனுஷ், கார்த்தி, அருண் விஜய், விஜயகுமார், எஸ்.ஏ.சந்திரசேகர், வடிவேல், யோகிபாபு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.  கலையை அரசியலாகவும், அரசியலை கலையாகவும் மாற்றியவர் கலைஞர் என நடிகர் சூர்யா தெரிவித்தார்.

இந்நிலையில் “கலைஞர் 100” விழாவில் பேசிய அவர், சினிமாவை சக்திவாய்ந்த ஆயுதமாக மாற்றி சமூகத்தில் மாற்றத்தை ஏற்படுத்தலாம் எனும் டிரெண்ட் செட் செய்தவர் கலைஞர். பராசக்தி படத்தில் கைரிக்ஷா இழுத்து வருபவரை பார்த்து சிவாஜி வருத்தப்பட்டு பேசுவார். ‘நீ வேணும்னா ஆட்சிக்கு வந்து மாத்திக்காட்டேன்’ என காவலர் பேசும் வசனம் வரும். பராசக்தி வெளியாகி 17 ஆண்டுகளுக்கு பிறகு ஆட்சிக்கு வந்து, மனிதர்கள் இழுக்கும் கைரிக்ஷாவை ஒழித்தவர் கலைஞர் என சூர்யா பேசினார்.