விஜய் தொலைக்காட்சியில் ஆரம்பிக்கப்பட்ட பிக் பாஸ் நிகழ்ச்சியில் 18 போட்டியாளர்கள் கலந்து கொண்டு விளையாடி வந்தார்கள். இதில் மொத்தம் 9 பேர் வெளியேறிய நிலையில் தற்போது நடிகை விசித்ரா வெளியேற்றப்பட்டுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது. அதிக வயதுடைய ஒரு பெண் போட்டியாளர், 97 நாட்கள் வரை பிக்பாஸ் வீட்டுக்குள் இருந்தது இதுவே முதல்முறை.

நேற்று 16 லட்சத்துடன் நடிகை பூர்ணிமா ரவி வெளியேறினார். தற்போது வீட்டில், விஷ்ணு, மணி, தினேஷ், மாயா, விஜய், அர்ச்சனா ஆகியோர் உள்ளனர். போட்டி இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், வெல்லப்போவது யார்? என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.