கர்நாடகா உயர் நீதிமன்ற நீதிபதி ஸ்ரீசானந்தா, பெங்களூரு போக்குவரத்து நெரிசல் குறித்த வழக்கை விசாரித்த போது, மைசூர் மேம்பாலம் அருகே உள்ள முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் பகுதியை ‘பாகிஸ்தான்’ என்று குறிப்பிட்டதால் பெரும் சர்ச்சை எழுந்தது. இந்த விவகாரம் உச்ச நீதிமன்றத்தின் கவனத்துக்கு சென்று, நீதிபதியின் கருத்துக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டது.

இந்த சர்ச்சையை தொடர்ந்து, தனது பேச்சுக்கு பகிரங்க மன்னிப்பு கேட்டுள்ளார் நீதிபதி ஸ்ரீசானந்தா. தனது பேச்சால் யாருடைய மனதையும் புண்படுத்தியிருந்தால் மன்னிப்பு கேட்டுக்கொள்வதாகவும், அது தவறான கருத்தாக இருந்ததாகவும் தெரிவித்துள்ளார்.

நீதிபதியின் இந்த மன்னிப்பு, இந்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.