
ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கும் லால் சலாம் படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது.
ரஜினிகாந்த் கேமியோ ரோலில் நடிக்க, விஷ்ணு விஷால், விக்ராந்த் முன்னணி ஹீரோக்களாக நடிக்கின்றனர். ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இப்படத்தை இயக்க, ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க, லைகா புரொடக்ஷன்ஸ் படத்தை தயாரித்தது.”லால் சலாம்” திரைப்படத்தில் விஷ்ணு விஷால் கிரிக்கெட் வீரராகவும், விக்ராந்த் முக்கிய வேடங்களிலும், ரஜினிகாந்த் கேமியோவில் நடித்துள்ளார்.
இந்த படத்தில் முன்னாள் கிரிக்கெட் வீரர் கபில்தேவ் சிறப்பு தோற்றத்தில் நடிக்கிறார். ரஜினிகாந்த் இந்த படத்தில் மொய்தீன் பாய் கதாபாத்திரத்தில் ஒரு நீட்டிக்கப்பட்ட கேமியோ தோற்றத்தில் நடிக்கிறார்.”லால் சலாம்” படத்தின் டீசர் தீபாவளியன்று (நவம்பர் 12, 2023) வெளியிடப்பட்டது, இது ரசிகர்களை மகிழ்வித்தது.
இந்நிலையில் தற்போது லால் சலாம் படத்தின் ட்ரெய்லர் வெளியானது. இன்று மாலை 7 மணிக்கு வெளியாகும் என லைகா புரொடக்ஷன்ஸ் அறிவித்திருந்த நிலையில், 9:30 மணிக்கு வெளியாகியுள்ளது.
The Pulsating LAL SALAAM trailer is OUT NOW! ▶️🔥 A glimpse into a gripping tale that awaits! 🎬
▶️ https://t.co/BWZ2eVWjNj#LalSalaam 🫡 In Cinemas 📽️✨ this FRIDAY, Feb 9th 2024 🗓️@rajinikanth @ash_rajinikanth @arrahman @TheVishnuVishal @vikranth_offl @Ananthika108… pic.twitter.com/h0mlppcKDl
— Lyca Productions (@LycaProductions) February 5, 2024