IPL கிரிக்கெட் தொடரின் 6-வது லீக் ஆட்டம் சேப்பாக்கத்தில் நேற்று நடந்தது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் மோதிக்கொண்டது. அப்போது டாஸ் வென்ற லக்னோ அணியானது பந்துவீச்சை தேர்வு செய்தது. அந்த வகையில் முதலில் விளையாடிய சென்னை நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 217 ரன்கள் எடுத்து குவித்தது. சென்னை அணியின் ருதுராஜ் கெயிக்வாட் அரை சதமடித்து 57 ரன்கள் எடுத்து அவுட் ஆகினார். அதேபோல் டேவன் கான்வே 29 பந்தில் 47 ரன்களும், ஷிவம் டுபே, ராயுடு போன்றோர் 27 ரன்களும் எடுத்தனர்.

அதன்பின் 218 ரன்கள் எடுத்தால் வெற்றி எனும் இலக்குடன் லக்னோ அணி களம் இறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் கைல் மேயர்ஸ் 22 பந்தில் 2 சிச்கர், 8 பவுண்டரி உட்பட 53 ரன்கள் குவித்து அவுட் ஆனார். முதல் விக்கெட்டுக்கு கைல் மேயர்ஸ், கேஎல் ராகுல் ஜோடி 79 ரன்கள் எடுத்தனர். அதேபோன்று பூரன் 32 ரன்கள், ஆயுஷ் பதோனி 23 ரன்கள், ஸ்டோய்னிஸ் 21 ரன்கள், கே.எல்.ராகுல் 20 ரன்கள் அடித்தனர். கடைசியில் லக்னோ அணியானது 205 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் வாயிலாக 12 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியானது  நடப்பு தொடரில் தன் முதல் வெற்றியை பதிவுசெய்தது.