தெலுங்கானா மாநிலம் மேடக் மாவட்டத்தில் உள்ள கத்ரியலில் பாலையா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு முத்தப்பா என்ற மனைவி இருந்துள்ளார். இந்த நிலையில் அதே பகுதியில் வசிக்கும் முரளி என்பவர் முத்தவ்வா(45) தனது தாய்க்கு சூனியம் வைத்து விட்டதாக நினைத்தார். இதனால் கோபமடைந்த முரளி உறவினர்களான லட்சுமி, ராமசாமி, ராஜலதா உள்ளிட்ட 7 பேருடன் இணைந்து முத்தவாவின் வீட்டிற்கு சென்றுள்ளார். அந்த நேரம் முத்தவ்வா வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது அவர்கள் முத்தவ்வாவை தரதரவென வீட்டிற்கு வெளியே இழுத்து வந்து சரமாரியாக தாக்கியுள்ளனர்.
இதனால் வலி தாங்க முடியாமல் முத்தவ்வா அங்கிருந்து தப்பியோட முயற்சி செய்தார். ஆனாலும் அவர்கள் விடாமல் துரத்தி சென்று முத்தவ்வா மீது பெட்ரோலை ஊற்றி தீ வைத்தனர். தனது மனைவியை காப்பாற்ற முயன்ற பாலையாவையும் அவர்கள் தாக்கியுள்ளனர். இது குறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று படுகாயமடைந்த பாலையாவை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தானர். படுகாயங்களுடன் மீட்கப்பட்ட முத்தவ்வா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் தலைமறைவான 7 பேரையும் தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.