தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பள்ளப்பட்டியில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது ஒரு வீட்டில் மது பாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்தது தெரியவந்தது. இதனால் சம்பந்தப்பட்ட வீட்டில் போலீசார் சோதனை நடத்தி 40 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

இதனையடுத்து போலீசார் நடத்திய விசாரணையில் சுமதி என்ற பெண் மது பாட்டில்களை பதுக்கி வைத்து கூடுதல் விலைக்கு விற்பனை செய்தது தெரியவந்தது. இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் சுமதியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.