தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு காலாண்டு விடுமுறை தொடங்கிய நிலையில் செப்டம்பர் 28ஆம் தேதி முதல் அக்டோபர் 2-ம் தேதி வரை 5 நாட்களுக்கு விடுமுறை வழங்கப்பட்டது. ஆனால் ஆசிரியர்கள் சங்கத்தினர் காலாண்டு விடுமுறை தினத்தை நீடிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். இது தொடர்பாக பரிசீலனை செய்யப்படும் என அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அறிவித்திருந்தார்.

அந்த வகையில் தற்போது காலாண்டு விடுமுறையை நீடித்து ‌ பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. அதன்படி ஆசிரியர்கள் சங்கத்தினர் கோரிக்கை விடுத்தபடி அக்டோபர் 6-ம் தேதி வரை காலாண்டு விடுமுறை நீடிக்கப்பட்டுள்ளது. இதனால் காலண்டு விடுமுறை கூடுதலாக 9 நாட்கள் வந்துள்ளது. மேலும் இந்த அறிவிப்பு ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.