அதிகரித்து வரும் கோதுமை விலையை கட்டுப்படுத்த இருப்பிலிருந்து 30 லட்சம் டன் கோதுமை விற்க ஒன்றிய அரசானது முடிவுசெய்துள்ளது

கடந்த வருடம் விளைச்சல் குறைந்ததால் கோதுமை மற்றும் கோதுமை மாவின் விலை உயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய உணவுத்துறை செயலாளர் தெரிவித்திருந்தார். இந்நிலையில் கோதுமை விலை உயர்வை குறைக்க அரசு கிடங்குகளில் இருந்து 30 லட்சம் டன் கோதுமையை வெளிச்சந்தையில் விற்பனை செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

இந்திய உணவு கழகம் இ-ஏலம் வாயிலாக ஒரு வாரத்தில் விற்பனையை தொடங்க உள்ளதாக கூறப்படுகிறது. தற்போதைய சந்தையில் கோதுமை மாவு விலையானது கிலோவுக்கு ரூ.38 வரை அதிகரித்துள்ளது.