திரை உலகின் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக வலம் வருபவர் வெற்றிமாறன். இவர் இப்போது நடிகர் சூரி நடிக்கும் “விடுதலை” படத்தை இயக்குகிறார். இதன் சூட்டிங் அண்மையில் முடிவடைந்தது. இதையடுத்து சூர்யா நடிக்கும் வாடிவாசல் திரைப்படத்தை இயக்க உள்ளார். இந்நிலையில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற டைரக்டர் வெற்றிமாறன் பேசியதாவது “பள்ளி, கல்லூரிகளில் சாதி சான்றிதழ் கேட்பதை கண்டிப்பாக நிறுத்தவேண்டும் என்று கூறி உள்ளார்.
மேலும் நான் என் குழந்தைகளுக்கு நோ கேஸ்ட் (No Cast) என்ற சான்றிதழ் வாங்க முயன்றேன். ஆனால் கொடுக்க மாட்டேன்னு சொல்லிட்டாங்க. அதன்பின் கோர்ட்டுக்கு சென்றேன். அங்கேயும் அப்படியெல்லாம் கொடுக்க இயலாது என்றும் நீங்க சாதி குறிப்பிட்டுத்தான் ஆகணும் என்றும் தீர்ப்பு கொடுத்துட்டாங்க” என்று அவர் பேசினார்.