தெலுங்கு டைரக்டர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் படம் “வாத்தி”. பிரபல தயாரிப்பாளர் நாகவம்சி தயாரித்து வரும் இந்த படம் நேரடியாக தெலுங்கிலும் வெளியாக இருக்கிறது. இந்த படத்திற்கு தெலுங்கில் சார் எனவும் தமிழில் வாத்தி எனவும் தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.

சம்யுக்தா மேனன் நாயகியாக நடிக்கும் இந்த படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசை அமைக்கிறார். இத்திரைப்படம் வரும் பிப்,.17 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்நிலையில் வாத்தி திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நடந்தது. இதையடுத்து  படத்தின் அனைத்து பாடல்களும் வெளியாகியுள்ளது.