தற்போதைய காலகட்டத்தில் விரைவாக வளர்ந்து வரும் தொழில்நுட்பமாக AI தொழில்நுட்பம் அமைந்துள்ளது.  பல துறைகளில் பல சாதனைகளை நிகழ்த்த கூடிய அற்புதமான விஞ்ஞான படைப்பாக இது இருக்கும் என பலரும் தங்களது கருத்துக்களை AI குறித்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் சினிமா துறையிலும் இதன் பங்கு மிக முக்கியமான ஒன்றாக கருதப்படுகிறது. 

தற்போதைய சூழ்நிலை வரை ஒரு புகைப்படத்தை புகைப்பட கலைஞர்கள் துணை இன்றி உருவாக்குவது, வீடியோக்களை அதற்குரிய கலைஞர்கள் துணை இன்றி உருவாக்குவது,  இசை அமைப்பது, மறைந்த பிரபல பின்னணி பாடகர்களின் குரலில் பாடல்களை பாட வைப்பது, அதேபோல் நமக்கு பிடித்த நடிகர்கள் இறந்த பின்பும் அவர்கள் மீண்டும் திரையில் காண விருப்பப்பட்டால் அவர்களை திரையில் கொண்டு வருவது என பல சாதனைகளை நிகழ்த்த முடியும்.

அந்த வகையில்,  நடிகர் விஜய் அவர்கள் நடித்து வரும் GOAT திரைப்படம் படத்தில் மறைந்த கேப்டன் விஜயகாந்த் அவர்கள் AI தொழில்நுட்பம் மூலம் ஒரு கேமியோ ரோல் ஒன்றில் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அதை உறுதி செய்யும் விதமாக அவரது மனைவி பிரேமலதா விஜயகாந்த் அவர்கள் பல நேர்காணல் களில்  அது குறித்த தகவல்களை கூறி வருகிறார்.

அதில், GOAT படத்தின் இயக்குனர் வெங்கட் பிரபு தன்னை நேரில் சந்தித்து இது குறித்து கூறியதாகவும், தளபதி விஜய் அவர்களும் தன்னை இது குறித்து நேரில் சந்தித்து ஆலோசிக்க உள்ளதாகவும் அவர் தெரிவித்து இருந்தார.இது  தளபதி விஜய் ரசிகர்களிடையே மட்டுமல்லாமல் தமிழ் சினிமா ரசிகர்கள்களையும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

 

View this post on Instagram

 

A post shared by Second Show (@secondshowtamil)