விழுப்புரத்தில் நடந்த அதிமுக 52ஆவது ஆண்டு துவக்க விழா பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய முன்னாள் அமைச்சர் சி.வி சண்முகம், 1969இல் ஆட்சிக்கு வந்தது கிட்டத்தட்ட 53 ஆண்டு காலம்… ஒரே குடும்பம். இந்த 53 ஆண்டு காலத்தில் ஒரே குடும்பம் தான்…  கருணாநிதி முதலமைச்சர்,  அந்தக் கட்சியினுடைய தலைவர். கருணாநிதி இறப்பிற்கு பிறகு அவருடைய மகன் ஸ்டாலின் அந்த கட்சியினுடைய தலைவர்,  இன்றைக்கு முதலமைச்சர்.

இன்றைக்கு ஸ்டாலின் பிறகு அவருடைய மகன் எங்கேயோ நடிகைகளோடு படத்தில் ஓடி ஆடிக்கொண்டு திரிந்து கொண்டிருந்த உதயநிதி…  இன்றைக்கு அழைத்து தமிழ்நாட்டினுடைய அமைச்சர். திமுகவுல மானம், ஈனம், சூடு, சொரணை எவனுக்குமே கிடையாதா? இந்த ஸ்டாலினை விட்டால் திமுகவிலேயே பதவியை அனுபவிக்கின்ற தகுதி, திறமை, யோகியத்தை, எவனுக்கும் இல்லையா ? ஏன் அந்த துரைமுருகனுக்கு இல்லையா ?

கே.என் நேருவுக்கு இல்லையா ? இங்கு சவடால் பேசிக் கொண்டிருக்கின்ற பொன்முடி பேச்சை பாரு.. நேற்று வந்தவர் உதயநிதி. உதயநிதிக்கு என்ன வயது ? இந்த கட்சிக்கு என்ன பாடுபட்டு இருக்கிறார் ?  திமுகவின் சரித்திரம் உதயநிதிக்கு தெரியுமா ? நயன்தாராவை கேட்டா சொல்லுவாப்ல… நக்மாவை கேட்டா சொல்லுவாப்ல….

அவங்களுடைய சரித்திரம் உதயநிதிக்கு தெரியும். திமுகவின் உடைய சரித்திரம் உதயநிதிக்கு தெரியுமா ? அவுங்க அப்பா ஸ்டாலினுக்கே தெரியாது, அப்புறம் எப்படி உதயநிதிக்கு தெரிய போகுது ? உதயநிதிக்கு பிறகு அவருடைய பிள்ளை இன்பநிதி என கடுமையாக விமர்சித்தார். முன்னாள் அமைச்சர் இப்படி பேசலாமா ? என பலரும் சி.வி சண்முகம் பேச்சிக்கு அதிருப்தி தெரிவித்தனர்.