போர் ஒத்திவைப்பை தொடர்ந்த ஐபிஎல் கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டு ஐபிஎல் 2025 லீக் ஆட்டங்களின் முடிவில் பிளே ஆப் சுற்றுக்கு தகுதியான அணிகள் பெங்களூர், குஜராத், பஞ்சாப் ஆகியன. மீதமுள்ள ஒரு இடத்திற்கு மும்பை மற்றும் டெல்லி இடையே போட்டி நடந்து வருகிறது.

மேலும் இத்தொடரில் இருந்து லக்னோ, கொல்கத்தா, சென்னை, ராஜஸ்தான், ஹைதராபாத் ஆகிய அணிகள் வெளியேறி உள்ளன. இந்நிலையில் நடந்து வரும் ஐபிஎல் தொடரில் கே.எல். ராகுல், டெல்லி அணிக்காக சிறப்பாக விளையாடி வருகிறார். இதுவரை நடந்த 11 போட்டிகளில் 493 ரன்கள் எடுத்து தனது திறமையை வெளிக்காட்டி வருகிறார்.

இவர் கடைசியாக ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற டி20 உலக கோப்பை தொடரில் இந்திய அணிக்காக விளையாடி உள்ளார். தற்போது ஐபிஎல் தொடரில் சிறப்பாக விளையாடி வரும் கே.எல். ராகுல் மீண்டும் இந்திய டி20 தொடரில் வாய்ப்பை பெறுவதற்காக கடுமையாக முயற்சித்து வருகிறார்.

இந்நிலையில் கே.எல் ராகுல் அனைத்து தரப்புகளிலும் விக்கெட் கீப்பிங், பேட்டிங், பௌலிங் என எல்லா இடங்களிலும் விளையாடுவதால் அவருக்கு இந்திய அணியில் இன்னொரு வாய்ப்பு கொடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இது குறித்து பிசிசிஐ இதுவரை எந்த ஒரு அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் வெளியிடவில்லை. ஆனால் இன்னும் சில தினங்களில் இது குறித்த அறிவிப்பு வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.