நடப்பு ஐபிஎல் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி சாம்பியன் பட்டத்தை வென்றது. இந்நிலையில் ஐபிஎல் ஏலத்தில் அதிகபட்சமாக மிட்செல் ஸ்டார்க் கொல்கத்தா அணியால் ரூ.24.75 கோடிக்கு வாங்கப்பட்டார். இவர் பெரிய அளவில் போட்டியில் தாக்கத்தை ஏற்படுத்தாததால் அதிக விலைக்கு ஸ்டார்க் வாங்கப்பட்டதற்கு விமர்சனங்கள் எழுந்தது. இந்நிலையில் கொல்கத்தா அணியின் பயிற்சியாளரான கம்பீர் ஸ்டார்க்கை அதிக விலைக்கு வாங்கியது தொடர்பாக விளக்கம் கொடுத்துள்ளார்.

இது குறித்து அவர் கூறியதாவது, எங்களுக்கு சமூக வலைதளங்களில் என்ன சொல்கிறார்கள் என்பது பற்றி கவலை கிடையாது. ஸ்டார்க்கின் திறமையை நாங்கள் எப்போதும் சந்தேகித்தது கிடையாது. இந்த தொடரில் அவர் துருப்புச் சீட்டாக இருப்பார் என்பது எங்களுக்கு தெரியும். அவர் குவாலிபயர் 1 இறுதிப்போட்டியில் அற்புதமாக பந்து வீசினார். வீரர்கள் ஜீரோ ரன்கள் எடுத்தால் விமர்சிக்க கூடிய அவர்கள் சதம் அடித்தால் பாராட்டுவார்கள். அவர் எங்களுக்கு என்ன மதிப்பை சேர்க்கிறார் என்பதுதான் முக்கியமே தவிர பணத்தைப் பற்றி எங்களுக்கு கவலை கிடையாது. மேலும் தொடக்கத்தில் அவர் சுமாராக விளையாடியதற்காக நாங்கள் வருத்தப்படவில்லை என்று கூறியுள்ளார்.