ஐபிஎல் இறுதிப்போட்டியில் நேற்று ஹைதராபாத் மற்றும் கொல்கத்தா அணிகள் மோதிய நிலையில் கொல்கத்தா அணி கோப்பையை வென்றது. இதற்கு முன்னதாக கடந்த 2012 மற்றும் 2014 ஆம் ஆண்டில் கொல்கத்தா அணி கோப்பையை வென்ற நிலையில் தற்போது 10 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் கோப்பையை வென்றுள்ளது.

இந்நிலையில் ஐபிஎல் போட்டியில் கோப்பையை வென்ற கொல்கத்தா அணிக்கு மேற்குவங்க மாநில முதல்வர் மம்தா பானர்ஜி தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில் கொல்கத்தா அணியின் வெற்றி பெங்கால் முழுவதும் கொண்டாட்டத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்த சீசனில் சாதனை படைத்த வீரர்கள், துணை ஊழியர்கள் மற்றும் உரிமையாளரை தனிப்பட்ட முறையில் வாழ்த்த விரும்புகிறேன். மேலும் ஐபிஎல் தொடரில் இது போன்ற வெற்றியை இன்னும் பல வருடங்களுக்கு பெற வாழ்த்துகிறேன் என்று கூறியுள்ளார்.