ஐபிஎல் இறுதி போட்டிகள் கொல்கத்தா அணி சாம்பியன் பட்டத்தை வென்று கோப்பையை கைப்பற்றியுள்ளது. ஐபிஎல் 2024 போட்டியில் கொல்கத்தா அணி எண் பயிற்சியாளராக கௌதம் கம்பீர் நியமிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் கொல்கத்தா அணியின் உரிமையாளரான நடிகர் ஷாருக்கான் கௌதம் கம்பீர்க்கு வெற்றி காசோலை ஒன்றினை கொடுத்ததாக தற்போது தகவல் வெளிவந்துள்ளது. அதாவது அணியை வெற்றி பெற வைத்ததற்காக எவ்வளவு பணம் வேண்டுமானாலும் நிரப்பிக் கொள்ளுமாறு அன்பு பரிசாக ஷாருக்கான் கம்பீற்கு கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

இருப்பினும் இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக கௌதம் கம்பீரை  நியமிக்க பிசிசிஐ முயற்சி செய்து வருவதாகவும் இதற்கு கம்பீருக்கும் விருப்பம் இருப்பதாக ஒரு தகவல் வெளிவந்துள்ளது. ஆனால் ஷாருக்கான் கம்பீரை 10 வருடங்களுக்கு கொல்கத்தா அணியின் பயிற்சியாளராக தக்க வைத்துக் கொள்ள விரும்புவதால்தான் அப்படி ஒரு பரிசு தொகையை கொடுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இருப்பினும் இந்த தகவல்களில் எந்த அளவுக்கு உண்மை இருக்கிறது என்பது தெரியவில்லை. மேலும் ‌ கொல்கத்தா அணியை விட்டு விலகி இந்திய அணியின் தலைமை பயிற்சிளர் பொறுப்பை கம்பீர் ஏற்பாரா இல்லையா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.