தமிழ் திரைஉலகில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவர் தான் யாஷிகா. இவர் இருட்டு அறையில் முரட்டு குத்து திரைப்படத்தின் வாயிலாக தமிழ் திரையுலகில் அறிமுகமானார். இதையடுத்து இவர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் சீசன் 2ல் கலந்துகொண்டு அனைத்து தரப்பு மக்கள் மத்தியிலும் பிரபலமடைந்தார். கடந்த வருடம் வெளியாகிய கடமையை செய் படத்தில் எஸ்.ஜே சூர்யாவிற்கு யாஷிகா ஜோடியாக நடித்து இருந்தார்.
இதற்கிடையில் யாஷிகா பதிவிடக்கூடிய கிளாமர் போட்டோக்களுக்கு ரசிகர்களின் கூட்டம் அதிகம். இந்த நிலையில் ஒரு ரசிகர் யாஷிகாவின் போட்டோவை முன் வைத்து அவரை சாமியாக வழிபட்டிருக்கிறார். அதனை தன் இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் அந்நபர் பகிர்ந்துள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த யாஷிகா, நானும் ஒரு மனுஷன் தான், அனைவரும் அன்பை பகிருவோம். நமக்கெல்லாம் ஒரு கடவுள் தான் உள்ளார். நாம் அவரை மட்டுமே வழிபட வேண்டும் என அந்நபருக்கு அட்வைஸ் கொடுத்துள்ளார்.