தமிழ், தெலுங்கில் பிரபல நடிகையாக வலம் வருபவர்தான் இலியானா டிகுரூஸ். இதையடுத்து இந்தி படங்களிலும் நடிக்க சென்றார். தமிழில் கேடி, நண்பன் திரைப்படங்களில் அவர் நடித்து உள்ளார். சென்ற ஏப்ரல் மாதத்தில் ஒருநாள் காலை அவர் இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட பதிவில், நல்ல செய்தி விரைவில் வரவுள்ளது. என் குட்டி டார்லிங்கை எதிர்பார்த்து காத்திருக்கிறேன் என்று பதிவிட்டார். இருப்பினும் தன் காதலர் யாரென்ற விபரங்கள் எதையும் அவர் வெளியிடவில்லை.

அவரது இப்பதிவை பார்த்ததும் வாழ்த்துகள் டார்லிங் என ரசிகர்கள் பலரும் வாழ்த்துகளை கூற தொடங்கிவிட்டனர். கடந்த சில வருடங்களுக்கு முன் அவர் புகைப்பட கலைஞரான ஆண்ட்ரூ நீபோன் என்பவருடன் தொடர்பில் இருந்து வந்துள்ளார். மேலும் “எப்போதுமே சிறந்த கணவராக இருப்பவர்” என்று அவரை பெருமையாக தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இலியானா குறிப்பிட்டார்.

இருப்பினும் அவர்களுக்கு இடையே திருமணம் நடந்துவிட்டதா? என்ற விவரம் தெரியவில்லை. இந்நிலையில் கர்ப்பமடைந்துள்ள செய்தியை தன் ரசிகர்களிடம் அவர் பகிர்ந்துள்ளார். மேலும் பல போட்டோக்களையும், வீடியோக்களையும் அவ்வப்போது வெளியிட்டு வருகிறார். அண்மையில் இலியானாவின் கர்ப்பகால கவனிப்புக்காக அவரது சகோதரி தயாரித்து இருந்த பிளாக் பாரெஸ்ட் கேக் புகைப்படங்களையும் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துகொண்டார்.