நீங்கள் வீட்டுக்கடன் வாங்கும் முன் எல்லா வங்கிகளின் வட்டி விகிதங்களையும் ஒப்பிட்டுப் பார்க்கவும். குறைந்த வட்டியில் வீட்டுக் கடன் வழங்கும் 5 வங்கிகளின் வட்டி விகிதங்கள் மற்றும் செயலாக்க கட்டணங்கள் குறித்த தகவல்களை நாம் அறிந்துக்கொள்ளலாம். எஸ்பிஐ வாடிக்கையாளர்களுக்கு 8.85% தொடக்க விகிதத்தில் வீட்டுக்கடன்களை வழங்குகிறது. இதற்கு 0.35% செயலாக்க சதவீதம் கொடுக்கவும்.

HDFC வங்கியானது 8.60% அறிமுக விகிதத்தில் வீட்டுக்கடன்களை வழங்குகிறது. இதில் செயலாக்க கட்டணம் 0.5% (அ) ரூ.3,000, எது அதிகமோ அதனை மட்டுமே செலுத்தவேண்டும். பாங்க் ஆப் பரோடா வங்கியானது 8.50 சதவீதத்தில் வீட்டுக்கடனை வழங்கும். பஞ்சாப் நேஷனல் 8.55% அறிமுகமான விகிதத்தில் வீட்டுக்கடன்களை வழங்குகிறது. அதற்கு கடன் 0.35 சதவீதம் (அதிகபட்சமாக ரூ.15,000) செயலாக்க கட்டணமாக செலுத்தவும். ஆக்சிஸ் வங்கியானது 8.60 சதவீதத்தில் வீட்டுக் கடனை வழங்குகிறது. கடனை பெறுவதற்கு செயலாக்கக் கட்டணமாக ரூ.10,000 செலுத்தவேண்டும்.