உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பு மக்களை ஆட்டிப்படைத்த நிலையில் தற்போது ஓரளவு குறைந்துள்ளது. இதனிடையே மஞ்சள் காய்ச்சல் எனும் புதிய வகை நோய் தொற்றினால் நாட்டில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஏ டி எஸ் ஜேசிப்டி என்ற கொசுவின் தாக்குதல் காரணமாக இந்த மஞ்சள் காய்ச்சல் உண்டாவதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. குளிர் காலங்களில் இந்த நோய் பரவுவதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளதாகவும் இதற்கான பாதுகாப்பு நடவடிக்கைகளை மக்கள் கட்டாயம் பின்பற்ற வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக தென் அமெரிக்கா மற்றும் ஆப்பிரிக்கா போன்ற நாடுகளில் மஞ்சள் காய்ச்சல் தீவிரமாக பரவி வருகிறது. அதனைப் போலவே சூடான் நாட்டிலும் மஞ்சள் காச்சல் நோய் பரவுவதால் உள்நாட்டு போர் காரணமாக அங்கிருந்து அகதிகளாக வரும் மக்கள் இந்தியாவிற்குள் நுழைவதற்குள் மஞ்சள் காய்ச்சலுக்கான தடுப்பு ஊசிகள் செலுத்தப்பட்டு இருப்பது உறுதி செய்யப்பட்டு அனுமதிக்கப்படுகின்றனர். இந்த நோய் பாதிக்கப்பட்டவர்கள் ஆறு நாட்கள் தனிமைப்படுத்தி வைக்கப்பட்டு அதன் பிறகு சோதனை செய்து விடுவிக்கப்படுகிறார்கள்.

மேலும் தென் அமெரிக்கா மற்றும் ஆப்பிரிக்கா நாடுகளில் இருந்து இந்தியாவிற்கு வருபவர்களுக்கும் இந்தியாவில் இருந்து அந்த நாடுகளுக்கு செல்பவர்களுக்கும் கட்டாயம் மஞ்சள் காய்ச்சல் தடுப்பூசி செலுத்தி இருக்க வேண்டும் எனவும் அதற்கான சான்றிதழ்களை சமர்ப்பித்த பிறகு தான் பயணிகள் அனுமதிக்கப்படுவார்கள் என அரசு தெரிவித்துள்ளது. அதே சமயம் தமிழகத்தில் சுகாதாரத்துறை ஏற்பாடு செய்துள்ள மூன்று பகுதிகளில் மட்டுமே மஞ்சள் காய்ச்சல் நோய்க்கான தடுப்பூசி செலுத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.