செய்தியாளர்களிடம் பேசிய தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன்,  என்னை பொறுத்தவரையில் சுமார் 20 ஆண்டுகளுக்கு மேலாக நான்  இந்த துறையில் பார்த்திருக்கிறேன். கிட்டத்தட்ட ஒரு 10 முதல்வர்களை நான் பார்த்திருக்கிறேன். நீர்வளத்துறை அமைச்சர்களை பார்த்து இருக்கிறேன். இதில் என்ன விஷயம் என்றால்,  சித்தராமையா அவர்கள் முதலமைச்சர் எனக்கும்,  தலைவருக்கு ரொம்ப வேண்டியவர்.

நீர்பாசனத்துறை அமைச்சரும் எனக்கு தெரிந்தவர்தான். ஆனால் இவர்கள் இவ்வளவு பிடிவாதமாக இருப்பது எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது.மத்திய அரசு காவேரி விவகாரத்தில் பாரபட்சமா காட்டுறாங்க என்று சொல்ல மாட்டேன். சற்று மெத்தனமாக இருக்கிறார்கள் என்று சொல்லுவேன். அதனால்தான் நமக்கு கேட்டது  கிடைக்க மாட்டேங்குது. இது ஒரு ஜனநாயக நாடு. இந்த நாட்டிற்கு என்று ஒரு அரசியல் சட்டம் இயற்றப்பட்டிருக்கிறது.

எவ்வளவு பெரியவர்களாக இருந்தாலும்,  அந்த அரசியல் சட்டப்படி நடக்க வேண்டும்.  ஆனால் பெரியவர்களாக இருக்கின்ற காரணத்தினாலேயே…  நாங்கள் அரசியல் சட்ட விதிப்படி    நடக்க மாட்டேன் என்று சொல்வது,  தவறானது. சாதாரண குடிமக்கள் பெரிய பொறுப்பில் இருக்கக்கூடியவர்களே  சட்டத்தை மதிக்க மாட்டேன் என்று சொன்னால்,  பிறகு சாதாரண குடிமக்களை எப்படி சட்டத்திற்கு  பணிவார்கள். ஆளுநரின்  இந்த போக்கு சரியில்லை. ஆனால் இந்த விளையாட்டை மத்திய அரசு வேடிக்கை பார்ப்பது சரியில்லை என தெரிவித்தார்.