செய்தியாளர்களிடம் பேசிய தமிழக முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, இன்றைக்கு ஏழை எளிய குடும்பத்தை சேர்ந்தவர்கள் நோய்வாய் பட்டு அரசு மருத்துவமனையில் சேர்ந்து தான் சிகிச்சை பெறுறாங்க. நிர்வாக திறமை இல்லாத அரசாங்கம் என்பதை நிரூபணம் ஆகி இருக்குது. அதை சரியான முறையிலே நிர்வகித்தால் நிச்சயமாக சிகிச்சை பெறுபவர்களுக்கு உரிய மருத்துவ வசதி கிடைக்கும். இதனால குணமடைந்து போவாங்க. இங்க மட்டும் இல்ல….

கடலூர்ல பாத்தா ? சளி தொந்தரவுள்ள குழந்தைகளுக்கு நாய்கடி ஊசி போடுறாங்க, கேவலமா இருக்குது…  ஏங்க நாய்கடி ஊசிக்கும் –  சளிக்கு என்ன சம்பந்தம் ? இதெல்லாம் எவ்வளவு அருவருப்பான செய்தி. இந்த அரசு எவ்ளோ மோசமா இருக்குது. அதேபோல அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழக ஆட்சியில பாத்தீங்கன்னா….  இரண்டு கையும் இல்லாத ஒருவருக்கு இரண்டு கையும் பொருத்தி சாதனை படைத்த அரசாங்கம் அண்ணா திமுக அரசு தான்.

அந்த அளவுக்கு மருத்துவமனை சிறப்பா செயல்படுத்து. மருத்துவ – செவிலியர்கள் அனைவரும் ஒருமித்த கருத்தோடு செயல்பட்ட காரணத்தினால…  இரண்டு கையில் இல்லாத ஒருவருக்கு இரண்டு கையை பொருத்தி மிகப்பெரிய வெற்றி பெற்று இருக்கின்றோம். இப்படிப்பட்ட சாதனைகள் எல்லாம் அண்ணா திமுக ஆட்சியில் தான் பார்க்க முடியும். திராவிட மாடல் ஆட்சியில் இன்று பேசிக் கொண்டிருக்கும் இடத்தில் இதனை எதிர்பார்க்க முடியாது.

இருந்தாலும் இன்றைக்கு திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி ஏற்பட்ட பிறகு மூன்று மருத்துவக் கல்லூரியை மூடிட்டாங்க.  இந்த ஆண்டு இன்னும் மாணவர்கள் சேர்க்கப்படவில்லை. கிட்டத்தட்ட 500 பேர் மருத்துவர் ஆக கூடிய வாய்ப்பை இழந்துட்டோம். ஸ்டான்லி மருத்துவமனை வரலாற்று சிறப்புமிக்க மருத்துவமனை. அதை கூட சரியா நிர்வாகிக்காத அரசாங்கம் தான் விடியா திமுக அரசு. இதற்கு மக்கள் நல்வாழ்த் துறை அமைச்சர் எதாவது சப்ப கட்டு கட்டி பேசுவார் என தெரிவித்தார்.