
தொடர் கனமழை காரணமாக நீலகிரி மாவட்டத்தில் உள்ள 6 தாலுகா பள்ளிகளுக்கு இன்று (ஜூலை 30) ஒருநாள் மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ள நிலையில் தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது. மேலும் தமிழகத்தில் நீலகிரி மாவட்ட பகுதியில் கன மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் தெரிவித்த நிலையில் இன்று உதகை ,குன்னுர் , குந்தா, கோத்தகிரி, கூடலூர், பந்தலூர் தாலுகாவில் உள்ள பள்ளிகளுக்கு இன்று (ஜூலை 30ந் தேதி) விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா உத்தரவிட்டுள்ளார்.