சமூக வலைத்தளங்களில் ஒரு பரபரப்பான வீடியோ வைரலாகி வருகிறது. அதில், ஆழ்கடலில் டைவிங் (Diving) செய்து கொண்டிருந்த நீச்சல் வீரர்கள் (Goosgotha) குழுவைச் சுறாக்களின் ஒரு பெரிய கூட்டம் திடீரெனத் தாக்குதல் நடத்தியுள்ளது.
கடலில் இதுபோன்ற சாகச நடவடிக்கைகளில் ஈடுபடும்போது, சுறாக்கள் இருக்கும் பகுதிகளுக்குச் செல்ல வேண்டாம் என்று பொதுவாக அறிவுறுத்தப்படும் நிலையில், இந்தக் கோரச் சம்பவம் நடந்துள்ளது.
View this post on Instagram
அந்த வைரல் வீடியோவில், நீச்சல் வீரர்கள் சுறாக் கூட்டத்திடம் இருந்து தப்பிக்கப் போராடுவதைக் காணலாம். அப்போது, 40 வயதான ஒரு நீச்சல் வீரரைச் சுறா ஒன்று கடுமையாகக் கடித்துள்ளது.
இதில் அவருக்குக் கையில் ஆழமான காயம் ஏற்பட்டு, அவர் படுகாயமடைந்துள்ளார். உடனடியாக, அவரது சக வீரர்கள் அவரைப் பத்திரமாக நீர்மட்டத்திற்குக் கொண்டு வந்து, பின்னர் சிகிச்சைக்காக மருத்துவமனைக்குக் கொண்டு சென்றுள்ளனர்.
“கடல் உயிரினங்களின் உலகத்திற்கு மனிதர்கள் செல்லக் கூடாது” என்றும், “சுறாக்கள் தற்காப்பிற்காகவே தாக்கியிருக்கலாம்” என்றும் இந்த வீடியோவுக்குப் பலரும் கருத்துத் தெரிவித்து வருகின்றனர்.
