முன்னாள் முதல்வர் கலைஞர் நூற்றாண்டு விழா இன்று தொடங்கி ஓராண்டு முழுவதும் கொண்டாட திமுக அரசு திட்டமிட்டுள்ளது. அதன்படி, சென்னையில் இன்று நடக்கும் இதன் தொடக்க விழாவில் முதல்வர் ஸ்டாலின், அமைச்சர்கள், உயர் அதிகாரிகள் என பலர் பங்கேற்க இருக்கின்றனர். இந்தியாவே திரும்பிப் பார்க்கும் அளவு நூற்றாண்டு விழாவை கொண்டாட திமுக அரசு திட்டமிட்டுள்ளது. விழாவுக்கான சிறப்பு லோகோவும் இன்று வெளியிடப்பட உள்ளது.