
இந்தியா முழுவதும் 5ஜி சேவையை ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் வேகமாக அறிமுகப்படுத்தி வருகிறது. மற்ற தொலைத்தொடர்பு நிறுவனங்களை காட்டிலும் ஜியோ நிறுவனம் அதிவேகமாக 5ஜி சேவையை அறிமுகப்படுத்தி வருகிறது. அதன் பிறகு தமிழகத்தில் ஜியோ நிறுவனம் 5ஜி சேவையை தஞ்சாவூர், நாகர்கோவில், நெல்லை, திருவண்ணாமலை, கும்பகோணம், கரூர், காஞ்சிபுரம், திண்டுக்கல், கடலூர், தூத்துக்குடி, தர்மபுரி, ஈரோடு, திருப்பூர், ஓசூர், வேலூர், சேலம், திருச்சி, மதுரை, கோவை மற்றும் சென்னை ஆகிய நகரங்களில் அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்நிலையில் நேற்று ஜியோ நிறுவனம் 5ஜி சேவையை புதிதாக 27 நகரங்களில் அறிமுகப் படுத்தியுள்ளது. இதில் தமிழகத்தில் கோவில்பட்டி மற்றும் பொள்ளாச்சி ஆகிய நகரங்களும் அடங்கும். மேலும் ஜியோ நிறுவனம் முன்னுருக்கும் மேற்பட்ட நகரங்களில் பயிற்சி சேவையை அறிமுகப்படுத்தியுள்ள நிலையில் தற்போது புதிதாக 27 நகரங்களில் 5ஜி சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது.