மோகன் ராஜா டைரக்டில் ஜெயம் ரவி நடிப்பில் சென்ற 2015 ஆம் வருடம் வெளியாகிய திரைப்படம் “தனி ஒருவன்”. இந்த படத்தில் அரவிந்த் சாமி, நயன்தாரா, ஹரிஷ் உத்தமன், கணேஷ் வெங்கட்ராமன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இருந்தனர். பெரும் எதிர்ப்பார்ப்பில் உருவாகிய இந்த படம் ரசிகர்களின் ஆதரவைப் பெற்று விமர்சனம் மற்றும் வசூல் ரீதியாக மாபெரும் வெற்றி பெற்றது. இதையடுத்து ரசிகர்கள் இப்படத்தின் 2-ம் பாகம் குறித்து சமூகவலைத்தளத்தில் அவ்வப்போது கேட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் தனி ஒருவன் படத்தின் 2-ம் பாகம் குறித்து ஜெயம் ரவி பேசி உள்ளார். அதாவது, தனி ஒருவன் படத்தின் 2-ம் பாகத்திற்கான கதை தயாராகி விட்டது. பொன்னியின் செல்வன் படத்திற்கு முன்னரே தனி ஒருவன் 2-ம் பாகத்தை உருவாக்க திட்டமிடப்பட்டது. எனினும் தானும், சகோதரர் ராஜாவும் அவரவர் பணியில் கவனம் செலுத்தி வருவதால், பணிகள் முடிந்தபின் இருவரும் தனி ஒருவன் திரைப்படத்தில் இணைவோம் என ஜெயம் ரவி கூறியுள்ளார்.