நடிகர் ரஜினிகாந்த் நடிக்கும் ‘ஜெயிலர்’ திரைப்படத்தின் மூன்றாவது பாடல் வெளியானது!!

இந்திய சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகர்களில் ஒருவராக திகழ்பவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவர் தற்போது நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார்.  இந்த படத்தில் பிரியங்கா மோகன், ரம்யா கிருஷ்ணன், வசந்த் ரவி, யோகி பாபு, மோகன்லால், சிவராஜ் குமார், மற்றும் தமன்னா ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். ஆகஸ்ட் 10-ஆம் தேதி படம் ரிலீஸ் ஆகிறது.

இந்நிலையில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ரஜினிகாந்த் நடிக்கும் ‘ஜெயிலர்’ திரைப்படத்தின் 3வது பாடலான ‘ஜுஜுபி’ வெளியானது. ஜெயிலர் திரைப்படத்திலிருந்து ‘காவாலா’ மற்றும் ‘HUKUM’ பாடல்கள் ஏற்கனவே வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. இந்நிலையில் ஜெயிலர் படத்தின் மூன்றாவது பாடலான ‘ஜுஜுபி’யும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.