தென்னிந்திய சினிமாவில் பிரபலமான நடிகையாக இருப்பவர் அமலாபால். இவர் தற்போது மலையாள சினிமாவில் பிரித்விராஜ் நடித்துள்ள ஆடு ஜீவிதம் படத்தில் ஹீரோயினாக நடித்துள்ளார். இந்த படத்தின் டிரைலர் அண்மையில் வெளியாகி கவனத்தை ஈர்த்தது. இந்த ட்ரெய்லர் வீடியோவில் அமலாபால் மற்றும் பிரித்திவிராஜ் லிப் லாக் முத்த காட்சி இருக்கும். இந்த முத்த காட்சி சர்ச்சையாக மாறிய நிலையில் அமலாபால் அதற்கு தற்போது விளக்கம் கொடுத்துள்ளார்.

இது குறித்து அவர் கூறியதாவது, படத்தின் கதையை சொல்லும்போதே லிப் லாக் முத்த காட்சி பற்றி பிரித்திவிராஜ் தெளிவாக சொல்லிவிட்டார். படத்திற்கு தேவை என்பதால் தான் லிப்லாக் முத்தக் காட்சிக்கு ஒத்துக்கொண்டேன். கதைக்கு தேவை என்பதற்காக நான் நிர்வாணமாகவே நடித்துள்ளேன். அப்படி இருக்கும்போது எனக்கு முத்த காட்சி எல்லாம் ஒரு பெரிய விஷயம் கிடையாது என அமலாபால் கூறுகிறார். மேலும் அமலாபால் கொடுத்த விளக்கம் ரசிகர்கள் மத்தியில் ஆச்சரியத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.