உத்தரப் பிரதேச மாநிலத்தின் கோண்டா மாவட்டத்தில் புதுமணமான பெண் ஒருவர் பாம்பு கடித்ததால் உயிரிழந்த பரிதாபமான சம்பவம் பெரும் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. இது திருமணமாகி ஆறு மாதங்கள்தான் கடந்த நிலையில் நடந்துள்ளதால், உறவினர்கள் மனமுடைந்து கதறி அழுகின்றனர்.

கோண்டா மாவட்டம் தாராப்கஞ்ச் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கிர்தார்பூர் நாக்நாத் பூர்வா என்ற கிராமத்தைச் சேர்ந்த சரிதா (20), பிப்ரவரி மாதத்தில் சுரேஷ் என்பவரை திருமணம் செய்து செய்துள்ளார். திருமணத்திற்கு பிறகு சுரேஷ் வேலைக்காக புனே நகரம் சென்ற நிலையில், சரிதா பாம்பு கடியினால் உயிரிழந்திருக்கிறார்.

ஞாயிற்றுக்கிழமை இரவு சரிதா தனது வீட்டில் படுக்கையறையில் படுத்துக்கொண்டிருந்தபோது, படுக்கையின் கீழிருந்த விஷப்பாம்பு திடீரென அவரை கடித்தது. அதில் ஒரு பற் அவரது கால் விரலில் சிக்கி உடைந்ததாகவும் கூறப்படுகிறது. உடனடியாக அவரை குடும்பத்தினர் அருகிலுள்ள சமூக சுகாதார மையத்திற்கு அழைத்துச் சென்றனர்.

சுகாதார மையத்தில் ஆரம்ப சிகிச்சை அளிக்கப்பட்ட பிறகு அவரது நிலைமை மோசமடைந்ததால், மருத்துவக் கல்லூரிக்கு மாற்றப்பட்டார். அங்கு சென்றதும், சிகிச்சை அளித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக உறுதி செய்தனர். இதனை அறிந்த உறவினர்கள் அங்கேத்தான் கதறி அழ ஆரம்பித்தனர்.

மரணத்துக்குப் பிறகு, அந்த அறையில் இருந்து பாம்பு தொடர்ந்து இரவு முழுவதும் இருந்ததாக கூறப்படுகிறது. காலையில் கிராம மக்கள் பாம்பை பிடித்து காட்டில் விட்டனர். பாம்பு கடித்த இடத்தில் கூட வீடு முழுவதும் பரபரப்பு நிலவியது.

சம்பவம் தொடர்பாக தகவல் பெறும் பொழுதே போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, சரிதாவின் உடலை மீட்டு, அப்புறப்படுத்தினர். புதுமண வாழ்க்கை தொடங்கிய சில மாதங்களிலேயே இளம் பெண்ணின் உயிரை பறித்த பாம்பு கடி, குடும்பத்தில் பேரவலத்தை ஏற்படுத்தியுள்ளது.