மும்பையில் விடுதியில் பாலியல் தொழிலில் ஈடுபட்டதாக ஒரு பெண் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த பெண்ணை வீட்டுக்காவலில் வைக்க வேண்டும் என மாஜிஸ்திரேட் உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பான வழக்கு மும்பை செசன்ஸ் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கை விசாரித்த நீதிபதி சட்டப்படி பாலியல் தொழிலில் ஈடுபடுவது தவறு கிடையாது என்று கூறினார்.

பொது இடத்தில் பிறருக்கு இடைஞ்சல் ஏற்படுத்தும் விதமாக பாலியல் தொழிலில் ஈடுபடுவது தான் தவறு என்றும் நீதிபதி கூறினார். மேலும் பாலியல் தொழிலில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்ட பெண்ணை விடுவிக்குமாறு உத்தரவிட்ட நீதிபதி, நாட்டில் சுதந்திரமாக நடமாட அடிப்படை உரிமை உள்ளதாக கூறி அவரை வீட்டு சிறையில் அடைத்து வைக்குமாறு கூறிய மாஜிஸ்ட்ரேட் உத்தரவையும் ரத்து செய்து உத்தரவிட்டார்.