டெல்லியின் முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியா மதுபான கொள்கை வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கிறார். தற்போது டெல்லி நீதிமன்றம் மணீஷ் சிசோடியாவின் நீதிமன்ற காவலை ஜூன் 2-ம் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டுள்ளது.

டெல்லியில் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி அரசு கடந்த 2021-22 இல் புதிய மதுபான கொள்கையை அறிமுகப்படுத்திய போது ஆம் ஆத்மி கட்சியினர் 100 கோடி வரை வரை லஞ்சம் பெற்றதாக குற்றச்சாட்டு எழுந்ததால் சிபிஐ மற்றும் அமலாக்க துறையினர் தனித்தனியாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

இந்த வழக்கில் டெல்லியின் துணை முதல்வராக இருந்த மணீஷ் சிசோடியாவை கடந்த பிப்ரவரி மாதம் 26-ம் தேதி சிபிஐ கைது செய்தது. மேலும் இவருடைய நீதிமன்ற காவல் முடிவுக்கு வந்ததை தொடர்ந்து அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது நீதிபதிகள் நீதிமன்ற காவலை ஜூன் 2-ம் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டனர்.