6  மணி நேரம் குறிப்பிட்ட பகுதிகளில் உள்ள வழித்தடங்களில் தாக்குதல் நடத்தப் போவதில்லை என இஸ்ரேல் தெரிவித்துள்ளது.ஆறு மணி நேரத்திற்குள் வடக்கு காசாவில் உள்ள மக்கள் கான் யூனிஸ்ட் நகரத்துக்கு செல்ல வேண்டும் என்றும் இஸ்ரேல் கூறி இருக்கிறது.

ஹமாஸ் குழுவினருக்கு எதிரான போரில் 3.60 லட்சம் இஸ்ரேல் வீரர்கள் ஈடுபட்டு வருகிறார்கள் எனவும் இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது. இஸ்ரேலில் உள்ள 1.20 லட்சம் யூத மக்களும் போரில் ஈடுபட பதிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. ஹமாஸ் குழுவினருக்கு எதிரான போர் நீடிக்கும் நிலையில் தனது ராணுவ பலத்தை இஸ்ரேல்  அதிகரித்து வருகின்றது.