
மகாராஷ்டிராவில் உள்ள புனே நகரம், கராடி பகுதியில் உள்ள பஞ்சஷில் குடியிருப்புத் தொகுதியில் கடந்த ஜூலை 3ஆம் தேதி, ஒரு கோல்டன் ரிட்ரீவர் வகை செல்லப்பிராணி நாய் மீது, அதனை அழைத்துச் செல்லும் டாக் வாக்கர் ஒருவன் லிப்ட் உள்ளே கொடூரமாக நடந்து கொண்ட சம்பவம் நிகழ்ந்தது.
அந்த நபர், நாயை தடியால் அடித்து, பின்னர் அதன் கழுத்தில் தனது காலை வைத்து வன்முறையாக ஒடித்ததும், பின்னர் நாயை இழுத்து வெளியே கொண்டுபோனதும் லிப்ட்-இன் சிசிடிவி காட்சியில் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. அதைவிட அதிர்ச்சியாக, அந்த நபர் அந்த செயல்களைச் செய்யும் போது சிரித்துவிட்டு சென்றதும் இந்தக் காட்சியில் தெளிவாகப் படம்பிடிக்கப்பட்டுள்ளது.
இந்த காணொளி தற்போது Street Dogs of Bombay என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிடப்பட்டு, சமூக வலைதளங்களில் பரவலாக வைரலாகி வருகிறது. “இது வெறும் வன்கொடுமை இல்லை, அது ஒரு சாடிஸ்டிக்கமான செயல்” என அந்தப் பக்கதில் கண்டனம் தெரிவித்துள்ளது.
View this post on Instagram
பாதிக்கப்பட்ட நாயின் குடும்பத்தினருக்கு இது தொடர்பாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போதைக்கு குற்றவாளியான டாக் வாக்கர் தப்பி ஓடிவிட்டதாகவும், அவரை பிடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அந்த பக்கதில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கு பலரும் சமூக வலைதளங்களில் கனிவுடன் பதிலளித்து, உரிய நடவடிக்கை வேண்டுமென வலியுறுத்தியுள்ளனர்.
இந்த சம்பவத்திற்கு முன்பும், புனே நகரத்தின் பேனர் பகுதியில், ஒரு பெண் தனது செல்லப் பூனை மீது பலமுறை தரையில் வீசி அடிக்கும் வீடியோ வைரலானது. அதேபோன்று, ஜூலை 2ஆம் தேதி, ஒரு ஆண் நபர் மீது பிட்புல் நாய் கடித்து விடாமல் பற்றிக் கொண்டிருந்த வீடியோ சமூகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
அந்த நபர் சத்தமிட்டு உதவிக்கேட்டும், நாயை விலக்க ஒருவர் கம்பியால் அடித்தும், தண்ணீர் ஊற்றியும் விட முடியவில்லை. இறுதியாக இருசக்கர வாகனத்தில் ரத்தமோடிய கையுடன் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்படும் காட்சி வெளியானது. இத்தகைய தொடர்ச்சியான விலங்கு கொடூரங்கள், மிருக நலச்சட்டங்களை மீறுபவர்களிடம் கடுமையான நடவடிக்கைகள் தேவை என்பதை வலியுறுத்துகின்றன.