
நடிகர் ரஜினியின் மகள் ஐஸ்வர்யா தன் வீட்டு லாக்கரிலிருந்த நகைகள் சிறிது சிறிதாக திருடப்பட்டு இருப்பதாகவும், இதில் வீட்டு வேலைக்காரி ஈஸ்வரி மற்றும் டிரைவர் வெங்கடேசனுக்கு தொடர்பு இருக்கலாம் எனவும் புகாரளித்திருந்தார். இதுகுறித்து தேனாம்பேட்டை குற்றப்பிரிவு காவல்துறையினர் விசாரணை நடத்தினர். அதாவது ஈஸ்வரி, வெங்கடேசன் ஆகியோரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் ஐஸ்வர்யாவின் வீட்டில் அவர்கள் கொள்ளையடித்தது தெரியவந்தது.
அதன்பின் 2 பேரையும் காவல்துறையினர் கைது செய்து சிறைச்சாலையில் அடைத்தனர். இந்நிலையில் நடிகர் ரஜினியின் மகள் ஐஸ்வர்யா வீட்டில் நடந்த திருட்டு வழக்கில் மேலும் 43 சவரன் நகைகள் மீட்கப்பட்டு இருக்கிறது. ஏற்கனவே 100 சவரன் தங்கம், 30 கிராம் வைரம், 4 கிலோ வெள்ளி, ரூ.1 கோடி மதிப்பிலான வீட்டிற்க்கான ஆவணம் ஆகியவை மீட்கப்பட்டுள்ளது. நகையை திருடிய குற்றத்தில் வீட்டில் வேலை செய்த ஈஸ்வரி மற்றும் வெங்கடேசனை காவலில் எடுத்து போலீசார் தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.