இன்றைய காலகட்டத்தில் சமூக வலைதளத்தில் பல்வேறு வீடியோக்கள் வைரலாகி வருகிறது. அப்படி வைரலாகும் சில வீடியோக்கள் நகைச்சுவையாகவும், சிந்திக்க வைக்க கூடியதாகவும் இருக்கிறது. அப்படிப்பட்ட ஒரு வீடியோ தான் தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

 

அதாவது ஒரு வீடியோவில் முதலில் குட்டி புலி ஒன்று வாத்தை துரத்துகிறது. இதையடுத்து சிறிது தூரத்திற்கு சென்ற வாத்து மீண்டும் திரும்பி குட்டி புலியை தாக்க முயற்சி செய்கிறது. இதனால் புலி அங்கிருந்து பயந்து ஓடுகிறது. இருப்பினும் வாத்து விடாமல் அந்த புலியின் பின் பகுதியை பிடித்து கடிக்கிறது.

இதனால் பயந்து போன புலி அங்குள்ள கூண்டு ஒன்றில் ஏறி பதங்குகிறது. இது தொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. இதற்கு பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.